நவம்பர் 27,2021 அன்று முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை படம்பிடித்த ஊடகவியலாளரை நான்கு சிங்கள அரசபடையினர் தாக்கி கொலைமுயற்சியில் ஈடுபட்டார்கள்.
விசுவா என்ற ஊடகவியலாளரே சிங்களப்படையால் தாக்கப்பட்டார்.ஊடகவியலாளர் படுகாயம் அடைந்துள்ளார்.அவருடைய ஈரூளி சேதமாக்கப்பட்டிருக்கிறது.கைகள் வயிறு தலை என பல்வேறு உடல்உறுப்புகள் சிங்களப்படையால் காயப்படுத்தப்பட்டிருக்கிறது.ஊடகவியலாளரின் தொலைபேசி சிங்களப்படையால் அடித்துப் பறித்தெடுக்கப்பட்டது.சிங்களப்படை நடத்திய தாக்குதலுக்கான காணொளிச்சான்று ஊடகவியலாளரின் தொலைபேசியில் பதியப்பட்டுள்ளது.இத்தாக்குதலுக்கு மூலகாரணம் இவர் ஒரு தமிழர்.சிங்களப்படைகள் 1949 ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் தாக்குவதும் கொலைசெய்வதும் நாளாந்த சிங்களப்படைகளின் கடமையாக சிங்கள அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதற்கு பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிலிருந்து காவல்துறை பதிவோ நீதிமன்ற வழக்கையோ தொடர முடியாது.இப்படி பல லட்சம் நேர்வுகள் பதியப்படாமல் மறைக்கப்பட்டிருக்கிறது.
ஊடகவியலாளர் இணையத்தள வழியில் உலகநாடுகளின் வெளிவிவகார அமைச்சருக்கும் ஐநா மனிதவுரிமைகள் சபைக்கும் முறைப்பாட்டைப் பதிவு செய்யவேண்டும்.
இதில் பதிவு செய்யும்பொழுது இந்நேர்வில் தொடர்புடைய சிங்களப்படைகள் பெயர் விபரங்களை இணைப்பது சிறப்பு.
எதிர்காலத்தில் சிங்களப்படைகளின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது வெளிநாட்டுப் பயணத்தடையைப் போடுவதற்கு புலத்தில் வாழும் தமிழர்களுக்குத் துணைபுரியும்.