2053 சுறவம் 10 ஆம் நாள் காரிக்கிழமை (22.1.2022,Saturday) இணையவழியூடாக பொங்கல்விழா நடைபெறுவதற்காக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பொங்கல்விழாவில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் நிதிசேர்ப்பும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
கனடா ஒன்ராரியோ பிரம்ரன் நகராட்சிப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் நிறுவுவதற்கு பிரம்மன் முதல்வர் பற்றிக் பிரவுண் தலைமையில் ஏனைய நகராட்சி உறுப்பினர்களின் ஒப்புதல் கனடா வாழ் தமிழர்களுக்கு வழங்கியிருந்தார்கள்.
இதற்கு பிரம்மன் தமிழ் ஒன்றியமும் பிரம்மன் தமிழ் முத்தோர் ஒன்றியமும் இணைந்து இதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள்.
இணையவழியினூடான பொங்கல்விழாவில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் அமைப்பதற்கான நிதி திரட்டலும் இடம்பெற இருக்கின்றது.
இந்நிதிப்பங்களிப்பு உலகத்தமிழர்களின் பங்களிப்போடு அமையவேண்டும்.ஆகவே உலகத்தமிழர்கள் அனைவரும் இவ்விணைய வழி நிதி சேர் பங்களிப்பில் இணைந்து உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் நிறுவம் பிரம்மன் நகராட்சிக்குரியது.இந்த நினைவுக்கல் அமைப்பதற்கான செயற்பாட்டு அமைப்புகளாக பிரம்மன் தமிழ் ஒன்றியமும் பிரம்மன் தமிழ் மூத்தோர் ஒன்றியமும் இணைந்து செயற்பாட்டு அமைப்புகளாக செயற்படுகிறார்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் நிறுவியதை தனிப்பட்ட அமைப்புகளோ அல்லது தனிப்பட்டவர்களோ உரிமை கோர முடியாது.
பிரம்மன் நினைவுக்கல் பிரம்மன் நகராட்சிக்குரிய சொத்து.இச்சொத்துக்கு பிரம்மன் வாழ் மக்களோடு 12 கோடி தமிழர்களும் பங்காளர்கள்.