கனடாவில் “பெரியகோயில் ” என்று சைவத்தமிழர்களால் அழைக்கப்படும் றிச்மென்கில் பிள்ளையார் கோயில் 2022 ஆண்டுக்கான ஆட்சிக்குழுவுக்கான தேர்தல் 2052 நளித்திங்கள் 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (12.12.2021) அன்று கோயில் உறுப்பினர்களால் வாக்களிக்கப்பட்டு அடுத்த ஆண்டுக்கான 4 ஈழத்தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.
பிள்ளையார் கோயில் 1983 ஆம் ஆண்டு றிச்மென்கில் நகராட்சிக்குள் அமைக்கப்பட்டது.இக்கோயில் சைவர்களும்வைணவர்களும் இணைந்து உருவாக்கினார்கள்.கோயில் ஆட்சிக்குழுவினரில் 19உறுப்பினர்கள் இருப்பார்கள்.அதில் 11உறுப்பினர்கள் ஈழத்தமிழர்கள்.
கடந்த காலங்களில் 11 ஈழத்தமிழர்களும் 2 பிரிவாகவே செயற்பட்டார்கள்.6ஈழத்தமிழர்கள் சைவர்களாவும் 5ஈழத்தமிழர்கள் வைணவர்களோடு இணைந்து சைவத்திற்கான செயற்பாடுகளுக்கு தொடர்ந்து தடையாக இருந்தார்கள்.வைணவர்களின் எடுபிடிகளாக அந்த 5 சைவத்தமிழர்கள் கடந்த காலங்களில் செயற்பட்டார்கள்.
இவர்களே கோயிலின் செயற்பாடுகளுக்கு இழிவான பணிகளைச் செய்து வந்தார்கள்.
2022 ஆம் ஆண்டு ஆட்சிக்குழுவில் 11 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் சைவநெறியை சீராக்கக் கூடியவராகவும் சைவநெறிக்கு எதிராக செயற்பாடாதவராகவும் இருக்கிறார்கள்.
2022 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட 4 சைவத் தமிழர்களையும் உலகத்தமிழர் சார்பாக வாழ்த்துகிறோம்.