1993 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் தமிழ்க்கலை தொழில்நுட்பக்கல்லூரி இலாபநோக்கற்ற அமைப்பாக கனடாவில் பதிவுசெய்யப்பட்டது.இக்கல்லூரி பொறுப்பாளராக சுப்பிரமணியம் இராசரத்தினம் அவர்கள் கடமை புரிந்தார்.அவரை தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விடுதலைப்புலிகளைச் சொல்லி பணம் திரட்டியவர்கள் விலக்கியதாக கல்லூரி ஆசிரியர்களாலும் கல்லூரி மாணவர்களின் பெற்றோராலும் பேசப்பட்டது.ஆனால் கல்லூரியில் சுப்பிரமணியம் இராசரத்தினம் விலக்கப்பட்டத்திற்கான சுற்றறிக்கை என்ன காரணத்திற்காக விலக்கப்பட்டார் என்ற விபரம் அறிக்கை வடிவில் வெளியிடப்படவில்லை. இதனால் பல்வேறு திரிபுபட்ட செய்திகள் தமிழ்ச்சமூகத்தால் பேசப்பட்டது. அதிலிருந்து சிலர் பிரிந்து சென்றார்கள்.இதனால் பல தமிழ்க்கல்லூரிகள் தனிப்பட்டவர்களால் தொடங்கப்பட்டது.
தமிழருக்கான பாடநூல் 1997 ஆம் ஆண்டு முதற்பதிப்பும் இரண்டாம் பதிப்பு 1999 ஆம் ஆண்டும் மூன்றாம் பதிப்பு 2001 ஆம் ஆண்டும் சுப்பிரமணியம் இராசரத்தினம் அவர்களால் ஆக்கப்பட்டது.இவரின் பதிப்புக்கள் ஆசிரியர்களாலும் பெற்றோராலும் சிறப்பாக வரவேற்கப்பட்டது.
2001 மற்றும் 2002 பல பதிப்புகள் அனைத்துலகத் தமிழ்ப் பண்பாட்டு அறிவியல் மேம்பாட்டு இணையத்தினரால் தமிழ்கற்கை பாட நூல்கள் வெளியாகின.அவை அனைத்தும் தமிழ் ஆசிரியர்களாலும் பெற்றோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலே சொல்லப்பட்ட அனைத்து பதிப்பு தமிழ்க் கற்கை பாடநூல்களை தனிப்பட்ட யாரும் பெறக்கூடியமுறையில் இருந்தது.அதனால் தமிழ்மொழிக் கல்வியில் 2009 வரை சீர்கேடுகள் நடைபெறவில்லை.
2009 ஆம் ஆண்டு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் வெளியிடப்பட்ட தமிழ் மாணவர் கற்கை நூல் அனைத்தையும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.குறிப்பாக தமிழ் பயிலும் மாணவர்கள் தமிழ் பாடங்களை தவறவிடாமல் கல்வி கற்க சென்றார்கள்.இதைப் பெற்றோர்களும் தமிழ் ஆசிரியர்களும் கண்காணித்திருந்தார்கள்.
2009 ஆம் ஆண்டு பதிப்பு தமிழ்க் கற்கை பாட நூல்கள் கனடா தமிழ் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கடும் கட்டுப்பாட்டை தமிழ்க் கலை தொழில் நுட்பக்கல்லூரி கடைப்பிடித்தது மிக மிக இழிவான செயல்.
இவர்கள் போட்ட கட்டுப்பாட்டால் பல ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் பல தமிழ் கற்கை நிலையங்களை உருவாக்கியதோடு வேற்றுமொழி கலந்த தமிழ் கற்கை நூல்களை உருவாக்குவதற்கு வழிசமைத்தவர்கள் கனடா தமிழ்தொழில்நுட்பக்கல்லூரியினர். 2009க்குப் பின் கனடாவில் தமிழ் தொழில்நுட்பக்கல்லூரியினர் பணம் திரட்டும் சுயநலத்தால் மொழிச்சீரழிவுக்கு வழிவகுத்தவர்கள்.
1993 ஆம் ஆண்டு முதல் கனடா தமிழ்க்கலை தொழில்நுட்பக் கல்லூரியாக ஆரம்பித்து 2012 ஆம் ஆண்டு கனடாத் தமிழ்க்கல்லூரியாக பெயர்மாற்றம் பெற்றது.
2012 ஆம் ஆண்டிலிருந்து தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தமிழ்க்கற்கை பாடநூல்கள் ஆசிரியர்களால் பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு மாணவர்கள் தமிழ்வகுப்பிற்கு போகும் நிலையை உயர்த்தியுள்ளது.
2021 சூலை மாதம் வெளியிடப்பட்ட அனைத்துலக தமிழ்க் கல்வி மேம்பாட்டுப் பேரவையில் வெளியிடப்பட்ட தமிழ் கற்கை பாடநூல்களில் வரலாற்றுத் திரிபு இருந்ததை பெற்றோர்கள் கண்டுபிடித்ததன் விளைவாக அப்பாடநூலை திரும்பபெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திரும்பபெற மறுத்த அனைத்துலக தமிழ்க்கல்வி மேம்பாட்டுப் பேரவையினர் வரலாற்றுத் திரிபில் சில மாற்றங்களை திருத்தியபடி 2022 சனவரி மாதம் வர இருப்பதாகவும் நூலாக்க ஒருங்கிணைப்பாளர் பொன்னையா விவேகானந்தன் தெரிவித்திருந்தார்.
உலகலாவிய தமிழர்களின் ஒட்டு மொத்த விருப்பமாக
1.2021 ஆம் ஆண்டு சூலைமாதம் வெளிவந்த. வரலாற்றுத் திரிபுகள் நிறைந்த தமிழ்ப்பாட கற்கை நூல் திரும்பப்பெறப்படவேண்டும்.
2.2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்ப்பாடகற்கை நூல்களே தமிழ்ப் பள்ளிகளில் பயன்படுத்தவேண்டும்.
3.இப்பாட நூல்கள் அனைத்து தமிழர்களும் பெற்றோர்களும் பெறும்படியான வழியைத் திறந்துவிடவேண்டும்.
4.கனடா தமிழ்க் கல்லூரியின் யாப்பு மக்கள் பார்வையிலும் இல்லை.தமிழ்க்கல்லூரியின் இணையத்திலும் வெளியிடப்படவில்லை.கல்லூரி யாப்பு மக்கள் படிப்பதற்கு இணையத்தில் வெளியிடவேண்டும்.
5.கனடா தமிழ்க் கல்லூரியில் உறுப்பினராகச் சேர்வதற்கான வழிமுறை மக்கள் பார்வையிலும் இல்லை.தமிழ்க்கல்லூரியின் இணையத்திலும் வெளியிடப்படவில்லை.மக்கள் கல்லூரி உறுப்பினராக சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கவேண்டும்.
6.கனடா தமிழ்க் கல்லூரியின் கணக்குகள் கடந்த 29 ஆண்டுகளாக மக்கள் பார்வையிலும் இல்லை.தமிழ்க்கல்லூரியின் இணையத்திலும் வெளியிடப்படவில்லை.இலாபநோக்கற்ற இவ்வமைப்பின் கணக்கில் வெளிப்படைத் தன்மை வேண்டும்.
மேலே சொல்லப்பட்ட வற்றை நிறைவேற்றத்தவறும் இடத்தில் கனடா தமிழ்க் கல்லூரியை பொதுமக்களிடம் கையளிப்பது தவிர வேறு வழி இல்லை.
கனடாவில் தமிழ்தொழில்நுட்பக் கல்லூரியும் அறிவகமும் தமிழ்த்தேசிய எதிர்நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.எடுத்துக்காட்டாக வரலாற்றுத் திரிபுப் பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்கியமை.இதுவும் இனவழிப்பின் ஒரு பகுதியாகும்.
இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது. ஆசிரியரோ எழுத்தாளரோ 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.ஆசிரியரோ எழுத்தாளரோ 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.