வல்வெட்டித்துறையை வல்வை மக்கள் முற்றாக முடக்குங்கள்.

பொங்கல் நாள் தமிழினத்தின் வரலாற்று சிறப்புமிக்க போற்றி கொண்டாடும் நாள். புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்தந்த நாடுகளில் தமிழ் மரபுரிமை நாளாக தை மாதத்தை கொண்டாடுகின்றோம்.

வல்வை மண்ணின் பெருமைமிக்கதும் சிறப்பு வாய்ந்த விழாக்களாக இந்திரவிழாவும் பட்டத்திருவிழாவும் பல ஆண்டுகளாக வல்வை மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற விழாக்கள்.

புலம்பெயர்ந்து வாழும் வல்வை மக்களால் தமிழின அழிப்பாளர்களை அழைப்பதை நிறுத்துமாறு கண்டன அறிக்கையை புலம்பெயர்ந்த வல்வை நலன்புரிச் சங்கத்தினர் வெளியிட்டு உள்ளார்கள்.

வல்வை உதயசூரியன் கழகமும் வல்வை மதவடி விக்னேசுவரா சனசமூக நிலையத்தினரும் தமிழினப்படுகொலையாளர்களோடு கைகோர்த்து புலம்பெயர் தமிழர்களால் தமிழின அழிப்பாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவழிப்புக்கான நீதிக்கான முன்னெடுப்புக்கு ஆப்பு அடிக்கும் பணியை வல்வையில் உள்ள 2 அமைப்புக்களும் முன்னெடுத்துள்ளார்கள்.

இதற்காக வல்வை வாழ் மக்கள் இப்பட்டத்திருவிழாவை புறக்கணிக்குமாறு வல்வை நலன்புரி சங்கத்தினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.வல்வை மக்கள் பட்டத்திருவிழாவன்று வீட்டில் முடங்கி இருங்கள்..

இதை வல்வை வாழ் மக்கள் வல்வை நகரசபை உறுப்பினர்கள் வல்வைபட்டத்திருவிழாப் போட்டியாளர்கள் பட்டத்திருவிழாவில் வணிகங்களுக்காக கடைபோடுபவர்கள் போக்குவரத்து உடைமைகள் உரிமையாளர்கள் அரசியல் கட்சியினர் அனைவரும் தமிழ்த்தேசிய உணர்வோடு இப்பட்டத்திருவிழாவைப் புறக்கணித்து
பட்டத்திருவிழா திடல் ஆள்நடமாட்டம் இல்லாத வெற்றுத் திடலாக மாற்றவேண்டும்.

தமிழ்மக்களுக்கான அரசியலில் தமிழரின் உரிமையைக் காப்பதற்கான அரசியல் அதிகாரம் கிடைக்கும்வரை தமிழின அழிப்பாளர்களை நாம் புறக்கணிப்போம்.

தமிழராய் ஒன்றிணைவோம்.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE