104 சட்டமூல வெற்றிக்கு உழைத்த விசய் தணிகாசலம் அவருடன் இணைந்த மக்களும்  அறவழிப்போராளிகள்

104 ஒன்ராரியோ சட்டமூலம் என்பது கனடாவில் ஒன்ராரியோ மாநிலப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ் இனஅழிப்பு பற்றிய அறிவூட்டல் கல்வியை ஒவ்வொரு ஆண்டும் மேமமாதம் 12 ஆம் நாள் முதல் மே 18ஆம் நாள் வரை நடத்துதவதற்கான சட்டமூலமாகும். கனடாவில் சிங்களமக்களும் சிங்களஅரசும் தமிழருக்கு எதிராக நடந்த இனப்படுகொலைக்கான நீதிக்காக தமிழர்கள் போராடும்பொழுது பல்வேறு எதிர் நடவடிக்கைககளை முன்நகர்த்தி வந்தார்கள்.

கனடாவில் இயங்கும் தமிழ் அமைப்புகள் சில பணிகளைச் செய்துவருகிறார்கள். தனிப்பட்டமுறையில் பல தமிழர்கள் பல பணிகளைச் செய்துவருகிறார்கள்.104 சட்டவரைபுக்கு எதிராக சிங்கள மக்களும் சிங்கள அரசும் பல்வேறு இடையூறுகளை பல இலட்சம் வெள்ளிகளை செலவு செய்து எதிர்த்து வந்தார்கள்.கனடா வாழ் தமிழர்களின் கடின உழைப்பும் விடாமுயற்சியுமே 104 சட்டமூலத்திற்கு கிடைத்த வெற்றி.

இதில் விசய் தணிகாசலம் அவர்கள் முன்னெடுத்த தமிழ் இன அழிப்பு கல்வியூட்டல் கிழமை செயற்திட்டத்தை விசய் தொடக்கத்தில் இருந்து 104 சட்டமூல வழக்கின் வெற்றி வரை ஒரு அடிகூட பின்நகர்த்தாமல் தொடர்ந்து போராடிய அறவழிப்போராளி விசய் தணிகாசலம்.

தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமைக்கான சட்டமூலம் – 104ஐ எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சிங்களமக்களும் சிங்கள இனவெறியரசும் தாக்கல் செய்த வழக்கு மே 24,2022 மே25,2022. இணைய செயலியூடாக விசாரிக்கப்பட்டு , அதன் தீர்ப்பு யூன் 28, 2022 அன்று வழங்கப்பட்டபோது நீதியரசர் யே.டி. அக்பரலி. யே. அவர்கள் சட்டமூலம்-104 ஒன்ராறியோவின் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று தீர்ப்பு வழங்கி மேற்படி வழக்கினை தள்ளுபடி செய்தார்.

அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து சட்டமூலம்-104ஐ பாதுகாக்கும் பொருட்டு தம்மையும் இவ்வழக்கில் இணைந்திருந்ததுடன், இதில் வாதிட்ட ஒன்ராறியோ அரச வழக்குரைஞர்கள் தமிழின அழிப்பு குறித்து ஒன்ராறியோ மக்களுக்கு எடுத்துக்கூறவும், பாதிக்கப்பட்ட தமது உறவுகளை நினைவுகூரவும் ஒன்ராறியோவுக்கு சட்ட அதிகாரம் உள்ளது என்பதையும் தமது வாதத்தில் வலுவாக முன்வைத்திருந்தனர்.

இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அக்பரலி, “இச்சட்டத்தின் நோக்கம் கல்வியூட்டுவதே என நான் கண்டறிந்ததை கருத்தில் கொண்டு, அது ஒன்ராறியோவின் சட்ட அதிகார வரம்பிற்குள் அரசியலமைப்புச் சட்டம், 1867 இன் எசு. 93 படி கல்வி தொடர்பான சட்டங்களை சிறப்பு சட்டமாக உருவாக்கும் அடிப்படையிலும், தமிழின அழிப்பை நினைவுகூரவும், கல்வி புகட்டவும் வழிவகுக்கும் என்றும் நீதியரசர் தெரிவித்துள்ளார். அத்துடன், இது ஏற்கனவே நடைமுறையிலுள்ள Holocaust அங்கீகரித்து நினைவுகூரும் மாநில சட்டம், உலகப் போர்கள் மற்றும் வேறு எந்த அனைத்துலக மோதலின் அனைத்துலக சட்ட ஒழுங்குகளை  மையமாகக் கொண்ட மாநில கல்விக் கொள்கையிலிருந்து வேறுபட்டதன்று எனவும் தெரிவித்தார்.

நீதியரசர் அக்பரலி மேலும் குறிப்பிடுகையில், “தமிழின அழிப்பு நடைபெற்றதை அங்கீகரிப்பதன் மூலம் அது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதுடன் மேலும் இன அழிப்புகள் நிகழா வண்ணம் தடுக்கவும், வரலாற்றை அறியவும், பாதிப்புகளிலிருந்து மக்கள் வெளியில் வரவும் உதவும் என்றார்.

இன அழிப்பை மறுதலிப்பதும் தடையங்களை அழிப்பதும் இன அழிப்பின் இறுதி வடிவம் என்பதை நாம் வரலாற்றிலிருந்து அறிகிறோம்.தமிழின அழிப்பு பற்றிய நினைவுகளைத் தொடர்ந்து பகிர்வதுடன் நடந்த உண்மையை அனைவருக்கும்  எடுத்துரைத்து, தொடர்ந்தும்  இனப்படுகொலைகள் பற்றிய அறிவைப் பெறுவோம்.

வரலாற்றில் நிகழ்ந்த தமிழின அழிப்பு, பிற இன அழிப்புகள் பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்தும் பேணுவதற்கும் அனைத்து மக்களையும் நான் ஊக்குவிக்கிறேன். இதன்மூலம், எதிர்காலத்தில் இவை நடைபெறுவததைத் தடுக்கவும், எமது சமூகத்தினை பாதிப்பிலிருந்து மீட்கவும் உதவும்.

 இந்த சட்டமூலம் தமிழின அழிப்புக்குள்ளாக்ககப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த நீதிக்கான  வெற்றி.தமிழர்களின் தேசியம் பாதுகாக்க ஒற்றைத்தீர்வு தமிழ்தேசியக்குடியரசை நிறுவுவதால் மட்டுமே கிடைக்கும்.

தமிழீழக்குடியரசு நிறுவும் வரை தமிழர்களின் அறிவுப்போர் தொடரும்.

 

 

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE