ஒன்ராரியோ மாநில அவையில் பெருமைக்குரிய மாநில உறுப்பினர் விசய் அவர்களின் தனியர் சட்டவரைபு104 அரச நடைமுறைக்கு ஒப்புதல்

2052 ஆம் ஆண்டு மேழம்  25ஆம் நாள் வியாழக்கிழமை(May6,2021) கனடா ஒன்ராறியோ மாநிலம் ரோரண்டோவில் உள்ள ஒன்ராறியோ மாநில அவை அமைந்துள்ள குயின்பாக்கில் 104 சட்டவரைபு தமிழின அழிப்பு கல்வி அறிவூட்டல் கிழமை 104 சட்டவரைபின்  3 ஆம் சுற்று அமுலாக்கம் மாநில அவையில் பேசப்பட்டு வாக்கெடுப்பின் மூலம் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கனடா மண்ணில் வாழும் ஒன்ராறியோ மாநில அவை உறுப்பினர் விசய் தணிகாசலம் அவர்கள் முன்னெடுத்த 104 சட்டவரைபு சிங்கள இனவெறி அரசின் பல இடையூறுகளையும் தாண்டி குறிப்பாக  கனடாவில் பரசுராமன் பாலன் போன்றோரின் தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்களின் முட்டுக்கட்டைகளை சுக்குநூறாக உடைந்தெறிந்தவர் தமிழ்தேசிய உணர்வாளர் ஒன்ராரியோ மாநில அவை உறுப்பினர் விசய் தணிகாசலம் அவர்கள் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரியவர்.

104  சட்டவரைபுக்கு 4400 ஆண்டுகளாக அரசியல் அதிகாரம் இழந்த ஈழத்தமிழர்களின் வலியை சுமந்துகொண்டு வலிமையோடு கனடா மண்ணில் களமாடிய  அமைப்புகள் இளையோர் பல்கலைக் கழக கல்லூரி உயர்நிலை மாணவர்கள் இனஉணர்வாளர்கள் மொழிஉணர்வாளர்கள் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் உலகில் பரந்துவாழும் 12கோடி தமிழர்கள் சார்பாக நன்றியுணர்வோடு பறை ஊடக குழுமம் வலியோடு விலிமையோடு இணைந்து நிற்போம்..

உலகப்பந்தில் முதன்முதலாக ஒன்ராறியோ மாநிலப் பள்ளிகளில் தமிழினப்படுகொலை அறிவூட்டும் கிழமை ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.கனடா வாழ் பல்லின மக்களிடையே தமிழின் அழிப்பு  பற்றிய உண்மையை அறிந்து பல்லின மக்களே எமக்கான நீதிக்காக குரல் கொடுக்கும் வாய்ப்பை உருவாக்கும் ஆக்கபூர்வமான செயல்களை விசய் தணிகாசலம் எடுத்துள்ளார்.

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரான இளையவர் விஜய் தணிகாசத்தினால் 2019 இல் தனியர் சட்டமூலமாக கொண்டுவரப்பட்ட இச்சட்டமூலம் முதலாம் இரண்டாம் முறையாகப் பேசப்பட்டு வாக்கெடுப்புகளின்  பின் மூன்றாவது முறையாகப பேசப்பட்டு  வாக்கெடுப்பிற்கு முன் அது குறித்த பாராளுமன்ற குழுவிற்கு அனுப்பப்பட்டது. அவ்குழுவின் பரிந்துரையின் கீழ் அச்சட்டமூலம் மே 6ஆம் நாள் வியாழக்கிழமை மீண்டும்  அவையில் பேசப்பட்டு  வாக்கெடுப்பிற்குமென எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இது குறித்த அவை உறுப்பினர்களின் ஏரணவுரையில் ஆளும் மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித்தலைவர் உட்பட தமிழினப்படுகொலை குறித்தும், ஈழத்தமிழ் மக்கள்  தொடர்ந்தும் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள் உரிமை மறுப்புகள் குறித்தும் விரிவாக பேசினர். இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவது ஈழத்தமிழ் மக்களுக்கு  உண்மையான ஈழமண்ணில் தமிழர்களின் இறைமையைப் பாதுகாப்பதற்காக அமையும் என்பதை வலியுறுத்தி தமது ஏகோபித்த ஆதரவை சட்டமூலத்திற்கு அனைத்து அவையினரும் ஆதரவு  வழங்கி நிறைவேற்றப்பட்டது.

ராணியின் ஒப்பம் பெறப்பட்டதும் அரசநடைமுறையில்  சட்டவரைபில் இணைந்துவிடும். அரச நடைமுறையின்சட்டவரைபின் ஒழுங்குக்கு அமைய  மே 18 ஆம் நாளை முதன்மைப்படுத்தி 7 நாட்கள் ஒன்ராரியோ மாநிலத்தில் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கிழமையாகக் கொள்ளப்படும். இந்நாட்களில் இனப்படுகொலை குறித்த பல அறிவூட்டல் ஆவணங்களை  பயன்படுத்தி முன்னெடுக்கும் பாரிய பொறுப்பு ஒன்ராரியோ வாழ் ஈழத்தமிழ் மக்களுக்கு குறிப்பாகவும், உலகலாவிள தமிழ் மக்களுக்கு பொதுவாகவும் அமைகிறது.

11983 இல் இந்திய நடுவண் அரசு வடமாகாணசபை, தமிழக சட்டசபை ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானங்களைக் கடந்து வெறும் தீர்மானமாக அமையாமல் ஒரு சட்டவரைவு மூலம் ஒரு சட்டமாக உலகப்பரப்பில் தமிழின இனப்படுகொலை ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது, வரலாற்றில்  ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது எனலாம். இது உலகபரப்பில் ஏனைய நாடுகளிலும் நகரசபைகள், மாநகரசபைகள், மாநில அவைகள், நாடாளுமன்றங்கள் என இனப்படுகொலையை அங்கீகரிக்க வைப்பதற்கான கதவுகளை தற்போது அகலத்திறந்துவிட்டுள்ளது.

இதற்கான முயற்சியில் இறங்கிய ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினர் இளையவர் விஜய் தணிகாசலம் மற்றும் இதற்காக தொடர்ந்தும் தம் பணியாற்றிய அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

 

 

 

T

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE