1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் தலைமையில்ஒன்று கூடி தக்கம் செய்து ஆரிய திணிப்பான சித்திரை ஆண்டுப்பிறப்பினை விடுத்து சுறவம் முதல் நாளே தமிழராண்டின் துவக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.ஒருமித்த அறிஞர்களின் முடிவாக திருவள்ளுவரின் பெயரில் தொடர் ஆண்டாகக் கொண்டு திருவள்ளுவர் காலம் கி.மு 31 ஆண்டு என்ற கணிப்பை வைத்து தமிழர் ஆண்டாக நடைமுறைப்படுத்த தமிழ் அறிஞர்கள் முடிவெடுத்தார்கள்.
தமிழ் ஆண்டு
சுறவம் 29 நாளையும் கும்பம் 30 நாளையும் மீனம் 30 நாளையும் மேழம் 31 நாளையும் விடை 32 நாளையும் ஆடவை 32 நாளையும் கடகம் 32 நாளையும் மடங்கல் 31 நாளையும் கன்னி 30 நாளையும் துலை 30 நாளையும் நளி 30 நாளையும் சிலை 29 நாளையும் உள்ளடக்கி 365 நாட்கள் கொண்டது. கிழமை 7 நாளை உள்ளடக்கியது.இதில் புதன் சனி இரண்டும் தமிழ்ச் சொற்கள் அல்ல.ஆகவே புதன் கிழமை அறிவன்கிழமையாகவும் சனிக்கிழமை காரிக்கிழமை என்ற தமிழ்ச்சொல்லோடு ஏனைய ஞாயிறு திங்கள் செவ்வாய் வியாழன் வெள்ளி யோடு கிழமை நாட்களாக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கிறித்தவ ஆண்டு 2022. தமிழ் ஆண்டு கிறித்தவ ஆண்டோடு 31 ஆண்டைக்கூட்டி வருவதே தமிழ் ஆண்டு 2053.
இங்கே பச்சையப்பன் கல்லூரியில் கூடிய தமிழ் அறிஞர்களில் முதன்மையாகப் பங்கேற்றவர்களின் பெயர்ப்பட்டியல்:
மறைமலை அடிகளார் தேவநேயப் பாவாணர் பெருஞ்சித்திரனார் பேராசிரியர் கா.நமசிவாயர் இ.மு. சுப்பிரமணியனார் மு.வரதராசனார் இறைக்குருவனார் வ. வேம்பையனார் பேராசிரியர் தமிழண்ணல் வெங்காலூர் குணா கதிர். தமிழ்வாணனார் சின்னப்பத்தமிழர கி.ஆ.பெ. விசுவநாதர திரு.வி.க பாரதிதாசனார் கா.சுப்பிரமணியனார் ந.மு.வேங்கடசாமியார் சோமசுந்தர் பாரதியார் புலவர் குழுவினர் கோ.சாரங்கபாணியார் சா.சி. குறிஞ்சிக்குமரனார் அ.பு.திருமாலனார் பேராசிரியர் இர.ந. வீரப்பனார் கம்பார் கனிமொழி குப்புசாமி மணி. வெள்ளையனார் திருமாறன் இரெ.சு.முத்தையா இரா. திருமாவளவனார் இர. திருச்செல்வனார். ஆனால் திருட்டு திராவிடர்கள் தமிழர்கள் முன்னெடுத்த தமிழ்நாட்காட்டி கூடலில் இணையவில்லை.
தமிழர்களின் காலக்கணிப்பு:
தமிழர்களின் காலக்கணிப்பு பகலவனை அடிப்படையாகக் கொண்டது.பகலவன் தோன்றி பகலவன் மறையும் வரை பகல் எனவும் பகலவன் மறைந்து மீண்டும் அடுத்தநாள் தோன்றும் வரை இரவு ஆகும். ஒருநாள் என்பது பகலவன் தோன்றி மீண்டும் தோன்றும் வரை ஆகும்.எடுத்துக்காட்டாக:தாயக மண்ணில் சைவக்கோயில்களில் பகல்திருவிழா பகலவன் மறையும் பொழுது நிறைவடையும்.இரவுத்திருவிழா இரவு நிறைவடையும் பொழுதில் நிறைவடையும்.தமிழரின் காலக்கணிப்பில் 12 மாதங்கள் எப்படி கணிக்கப்பட்டது.வான்மண்டலத்தை 12 ஒரைகளாகப் பிரித்தார்கள்.ஒரு ஒரைக்குள் பகலவன் நுழைந்து வெளியேறும் காலத்தினை 1 திங்களாகக் கணித்தனர்.தமிழர்கள் 12ஒரையையும் 12 திங்களாகக் கொண்டனர்.பகலவனை நடுவில் கொண்ட நீள்வட்ட வழியில் பூமியில் இருந்து பார்க்கும் போது பகலவனின் பின்புறம் ஒரு ஒரை மறைந்திருக்கும்.அந்த ஒரை மறைந்திருக்கும் காலம் ஒரு திங்கள் ஆகும்.அந்த நேரத்தில் அந்த ஒரையின் வடிவத்தைக் கொண்டே ஒவ்வொரு திங்களின் பெயர்கள் இடம்பெற்றது.தமிழரின் முதல் திங்கள் சுறா வடிவத்தைக் கொண்டதால் சுறவம் என்று அழைக்கிறோம்.இரண்டாவது மாதம் கும்ப வடிவத்தைக் கொண்டால் கும்பம் என்று அழைக்கிறோம்.இப்படியே மீனம் மேழம் விடை ஆடவை கடகம் மடங்கல் கன்னி துளை நளி சிலை என 12 திங்களையும் தமிழில் அழைக்கிறோம்.
தமிழர் திருநாள்
திருவள்ளுவர் ஆண்டு கிழமை விழா:
சிலைத்திங்கள் 29 போகிறேன்
சுறவம் 1 ஆம் நாள் பொங்கல் புத்தாண்டுவிழா
சுறவம் 2ஆம் நாள் திருவள்ளுவர்விழா
சுறவம் 3ஆம் நாள் மாட்டுப்பொங்கல் விழா
சுறவம் 4ஆம் நாள் இயல்த்தமிழ் விழா
சுறவம் 5ஆம் நாள் இசைத்தமிழ் விழா
சுறவம் 6ஆம் நாள் நாடகத்தமிழ் விழா
நாம் நீண்டநெடிய வரலாற்றுப் பெருமை கொண்ட தொன்மைக்குடிகள்.எமது முன்னோர்கள் சான்றோர்கள் அறிஞர்கள் தொன்றுதொட்டு தமிழர்களின் அறவாழ்வியலை உயரிய நோக்கோடு எமக்குப் படையலாக படைத்திருக்கிறார்கள்.அந்த உயரிய பெருமைமிக்க வரலாற்றைப் படித்து அதன்படி நடப்பதே எமது வாழ்வியலின் சிறப்பாகும்.எம்முடைய வரலாற்றுப் படையல் தான் எம்மை வழிநடத்தவேண்டும்.தமிழர்களிடம் ஒன்றுமில்லை என்ற தாழ்வை ஏற்படுத்தி எமது வரலாற்று அறிவியல் படைப்புக்களை களவாடிய வேற்றினத்தவர்கள் எமது வரலாற்றைத் திருடியதோடு நிற்காமல் எமது இனத்தை தாழ்த்தி எம் மனதில் நாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற மனநிலையைத் திணித்தவர்கள் வேற்றினத்தவர்கள்.எம்மில் 99 விழுக்காட்டினர் எம்மின வரலாற்றை புரியாமல் அறியாமல் மற்ற இனத்தவர்களிடம் காலம்காலமாக ஏமாந்த செம்மறியாட்டு மந்தைகளாக வாழ்கிறோம். நம்பிக்கை துரோகத்தால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இனம்.நாம் விழித்தெழுந்து தமிழரின் வரலாற்றைப் படித்து தமிழர்கள் ஏமாளிகளாக வாழ மறுக்கும் மனநிலையை பெறவேண்டும்.
தமிழர்களின் அறிவியல் ஆளுமை நிறைந்த தமிழ்நாட்காட்டி:
தமிழர்கள் இயற்கையைக் கொண்டு காலத்தைப் வகுத்தார்கள். தமிழர்களின் காலக்கணிப்பு பகலவனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பெற்றது.ஒரு நாளை ஆறு பொழுதுகளாக* வகுத்து வைத்திருந்தார்கள்.
*வைகறை*
*காலை*
*நண்பகல்*
*எற்பாடு*
*மாலை*
*இரவு*
என்று அவற்றை அழைத்தார்கள்.அது மட்டுமல்ல, அந்த ஆறு பொழுதுகளின் தொகுப்பையும் *அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்*. அதாவது ஒரு நாளில் ஆறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்*.அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 மணித்துளிகள், அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன*. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்_.
1 நாழிகை – 24 மணித்துளி
60 நாழிகை – 1440 மணித்துளி
1440 மணித்துளி – 24 மணி
24 மணி – 1 நாள்)
ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, *ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்*.
இளவேனில் முதுவேனில் கார் – கூதிர் – முன்பனி பின்பனி
பொங்கல் புத்தாண்டு நாளில் புத்துணர்வோடு தமிழனாக தலைநிமிர்ந்து வாழ எம்மனநிலையில் புதிய மாற்றத்தை உள்வாங்க வேண்டும் என்ற உறுதிமொழி எடுக்கவேண்டும்.
இன்று பிராமணர்களால் வழக்கத்தில் உள்ள ஆரிய நாட்காட்டியின் அடிப்படையில் சித்திரையில் பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டு அல்ல.
1.ஆரிய நாட்காட்டி நிலாவை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது.எடுத்துக்காட்டாக
பிரதமை ஒராம்பிறை. துதியை 2 ஆம்பிறை. திருதியை 3ஆம் பிறை. சதுர்த்தி 4ஆம் பிறை. பஞ்சமி 5 ஆம்பிறை.சட்டி 6ஆம்பிறை.சப்தமி7ஆம்பிறை. அட்டமி8ஆம்பிறை. நவமி 9ஆம்பிறை. தசமி 10ஆம் பிறை. ஏகாதசி 11ஆம்பிறை.திருவாதசி 12ஆம்பிறை. திரியோதசி13 ஆம்பிறை. சதுர்த்ததி 14ஆம் பிறை.பெளர்ணமி நிறைமதி. அமாவாசை இருட்டு நாள். .இச்சொற்கள் அனைத்தும் தமிழ்ச் சொற்கள் அல்ல.
திதி என்ற வடமொழிச்சொல்.பிறைநாள் என்பது இதன் பொருள்.15 பிறை நாட்களே 15 திதி என வடமொழியில் சொல்லப்படுகிறது.இந்த நாட்களை வைத்துத் தான் பிராமணர்கள் தமிழர்களை ஏமாற்றிய நம்பிக்கைத்துரோகிகளாக தொடர்ந்து எம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
2.ஆண்டுகள் எண்ணுக்கணக்கில் இல்லை.60 ஆண்டுகள் சுழற்சி முறையில் வரும்.ஆகவே வரலாற்றுகளை ஆவணப்படுத்துவதில் மிகப் பெரிய சிக்கல்.அடுத்து இவர்கள் கிறித்தவ நாட்காட்டியின் நாட்களையே அப்படியே பயன்படுத்துகிறார்கள்.ஆரியருக்கென்று ஒரு ஆண்டு நாள் எண்ணிக்கை கொண்ட நாட்காட்டி கிடையாது.
3.ஆரிய நாட்காட்டி வடமொழிச் சொற்களால் உருவாக்கப்பட்டததோடு அறிவுக்குரியதல்ல.
4.கிறித்தவ நாட்காட்டியின் எண்ணிக்கையும் 60 ஆண்டு சுழற்சியையும் பிறையின் வளர்பிறை தேய்பிறையைக் கொண்டு கலங்கிய தெளிவில்லாத நாட்காட்டியையே தமிழர்கள் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.இந்நாட்காட்டி அறிவும் ஆற்றலும் அற்ற பிராமண முட்டாள்களால் தமிழர்களின் வாழ்வியலுக்குள்ளும் இறைவழிபாட்டிலும் சொருகப்பட்டிருக்கிறது.
கணக்கீட்டு அடிப்படை இல்லாத 60 ஆண்டு சுழற்சி முறையில் வடமொழி நாட்காட்டியில் உள்ள பெயர்கள் கீழே:
- பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய
*தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், யப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்*.
தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! *இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை* இது. நம் இளவேனில் காலம் சுறவம்(சனவரியில்) மாதம் தான். அதனால்தான் சனவரி 2ஆவத் கிழமை நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் சுறவம் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம்.