நல்லாசிரியர் விருதுவிழாவில் தமிழ்த்தேசியப்போராளியின் சிறப்புரை

பன்னாட்டு அரிமா சங்க கூட்டமைப்பின் நல்லாசிரியர் விருதுவிழா 2052ஆம் ஆண்டு கன்னித்திங்கள் 4 ஆம்நாள் திங்ட்கிழமை(September 19,2021)மிகச் சிறப்பாக நடைபெற்றது.கல்வியாளர்கள் நிறைந்த இவ்வரங்கில் தமிழ்நாட்டு மக்களின் அரசியலை வளமாக்க உழைக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கமைப்பாளர் தமிழ்த்தேசியப்போராளி செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.ஆசிரியர் பெருந்தகைகளின் ஆற்றல் ஆளுமை வலிமை உயர்வானது என்பது பற்றிய ஆழமான எண்ணங்களை தனது சிறப்புரையில் செந்தமிழன் சீமான் வழங்கியிருந்தார்.ஆசிரியர் பெருந்தகைகளே ஒருநாட்டின் அரசியலை வளம்படுத்தும் ஆற்றலும் ஆளுமையும் அடித்தளமாக அமைவதற்கு அடிக்கல்லாக இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தி  செந்தமிழன் சீமான் சிறப்புரை வங்கியிருக்கிறார்.தமிழ்நாட்டு அரசியலில் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாட்டை வளமாக்க நாம் தமிழர் பிள்ளைகள் உழைக்கிறார்கள்.இவர்களின் உண்மையான உழைப்பால் தமிழக அரசியலில் புதிய மாற்றத்திற்கு இந்த ஆசிரியர்பெருந்தகைகள் உழைக்கவேண்டும்.நாம் தமிழர் கட்சியினர் இன்னும் மாநில அவையில் தெரிவு செய்யவில்லை.ஆனால் இன்று செந்தமிழன் சீமானின் கொள்கைகளை ஆட்சியாளர்கள் கையில் எடுத்து வெற்றறிக்கைககளை வெளியிட வேண்டிய தேவையை நாம் மிழர் கட்சியினர் உருவாக்கியிருக்கிறார்கள்.நாம் அனைரும் இணைந்து நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய அரசியலை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க தமிழ்நாட்டு அரசியல் அதிகாரத்தை கைப்பபிடிக்க உழைப்போம்.செந்தமிழன் சீமான் அவர்களை இவ்விழாவில் சிறப்புரை ஆற்ற அழைத்த பன்னாட்டு அரிமா சங்க கூட்டமைப்புக்கு உலகத்தமிழர்கள் வாழ்த்துவதோடு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கனடாவில் இருந்து பறையன்.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE