தமிழ்த்தேசிய அரசியலை உடைக்கவோ சீரழிக்கவோ முடியாது.

தமிழ்த்தேசியம் என்றபோர்வையைப் போர்த்திக்கொண்டு பல போலித்தமிழ்த்தேசியவாளர்கள் இப்போது கிளம்பியிருக்கிறார்கள்.2009க்குப்பின் செந்தமிழன் சீமான் ஒற்றைமனிதனாகப் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்து தன்னை இணைப்பாளராக்கி தேசியத்தலைவரை தலைவராக ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டு தெருவெங்கும் தமிழ்தேசிய அரசியலை விதைத்தார்.சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சியை ஒருங்கிணைத்து கடந்த 11 ஆண்டாக போராடி வருகிறார்.

இன்று செந்தமிழன் சீமானின் கடின உழைப்பால் விதைக்கப்பட்ட தமிழ்த்தேசிய விதைகள் தமிழ்நாட்டு மண்ணில் வீரியம் பெற்று வந்துள்ளது.தமிழ்த்தேசியம் என்பது உலகில் வாழும் பல்வேறு நாடுகளிலும் தமிழ்நாட்டின் அயல்மாநிலத்தில் வாழும் தமிழர்களின் தமிழ்த்தேசிய அரசியலுக்காகவும் நாம் தமிழர் கட்சி போராடி வருகிறார்கள்.

உழைப்பின் வெளிப்பாடாக கடந்த தேர்தலில் 30இலட்சம் தமிழ்தேசிய வாக்குககளை தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கிறார்கள். இதுவரை தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் தமக்கான வாக்கு எவ்வளவு என்று சொல்லமுடியாது.காசு கொடுத்து வாக்கை வாங்கித்தான் ஆட்சி நடத்துகிறார்கள்.இப்போது சீமானின் வலிமையை உடைக்க தமிழ்நாடு,புலம்பெயர்நாடுகள் தமிழ்நாட்டின் அயல்மாநிலத்தில் என பல்முனையில் சீமானை பலமிழக்க தமிழ்த்தேசியம் என்ற கருவியை போலித்தமிழ்த்தேசியவாளர்கள் தூக்கியுள்ளார்கள்.அந்தவவகையில் கர்நாடக மண்ணில் கணேசன் அவர்கள் சீமானை எதிர்க்க தமிழ்த்தேசிய ஒற்றுமை என்ற கருவியைத் தூக்கி உலகத்தமிழர்களை ஏமாற்ற புறப்பட்டுள்ளார்.

கணேசன் கர்நாடக மண்ணில் வாழும் தமிழர்களுக்கான அரசியல் என்ன என்ற புரிதல் இல்லாமல் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் செந்தமிழன் சீமானை சீண்டி தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியலை சீரழிக்கத்துடிக்கிறார். கர்நாடக தமிழ்ச்சங்கம் பல்வேறு பணிகளை ஆற்றி வந்த வரலாறு பதிவாகியிருக்கிறது.கர்நாடக தமிழ்ச்சங்கத்தின் கடந்தகால நற்பெயரையும் சீரழிக்கும் பணியிலும் கணேசன் இறங்கியிருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.அத்தோடு உலகத்தமிழர்கள் கர்நாடக தமிழ்ச்சங்கத்தின் மீது கொண்டுள்ள உயர்மதிப்புக்கும் சேறுபூசும்பணியையும் கு.கணேசன் முன்னெடுப்பதாக மக்கள் தமது கோபங்களை கொட்டித்தீர்த்திருக்கிறார்கள்.

வைகோ,கொளத்தூர் மணி போன்ற திராவிட சிந்தனைக்குள் நின்று தமிழ்த்தேசியத்தை நேரடியாக எதிர்ப்பவர்கள்.அத்தோடு இன்று சீமானை ஆதரிக்க மறுக்கும் போலித் தமிழ்த்தேசியவாளர்களை கு.கணேசன் ஒன்றிணைக்கப்போவதாகச் சொல்லுகிறார்.இது தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிரான செயற்பாடு.தமிழ்த்தேசிய அரசியலை யார் எதிர்த்தாலும் அவர்களை மக்களின் எண்ணவெளிப்பாட்டிற்கு அமைய வெளிப்படுத்தப்படும்.

கர்நாடக அரசிடம் நீர்ச்சிக்கலை தீர்ப்பதற்கான முயற்சியை எடுக்காமல் தமிழ்நாட்டு தமிழ்த்தேசிய அரசியலை குழப்பத்துடிப்பதேன்?கர்நாடகமண்ணில் விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கான நீதி நட்டஈடு பாதுகாப்பு என்பதை உறுதிப்படுத்துவதற்கான அரசியலை செய்யாமல் தமிழ்நாட்டில்  வளர்ந்து வரும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு கணேசன் ஆப்படிக்கத் துடிப்பது வன்மையாக உலகத் தமிழ்மக்கள் கண்டிக்கிறார்கள்.தமிழ்த்தேசிய அரசியலை உடைக்கவோ சீரழிக்கவோ உலகத்தமிழர்கள் இடம்கொடுக்கமாட்டார்கள் என்பதை தெளிவாக்கவிரும்புகிறோம்.

https://youtu.be/pL4g2MzVC5A

https://youtu.be/pL4g2MzVC5A

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE