2000 ஆவது நாளாக தொடர் போராட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவணயீர்ப்பு போராட்டம் இன்று (12.08.2022)2000 ஆவதுநாளை கடந்து செல்கின்ற நிலைமையில், கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் மாபெரும் போராட்டம் ஒன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அப்பாவித் தமிழர்கள் உறவினர்கள் முன்னிலையில்

இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட அப்பாவித் தமிழ்உறவுகளை தேடி அவர்களுடைய உறவுகள் கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கள இனவெறியரசின் தமிழினப்படுகொலை நிறைவடைந்த காலம் முதல் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் தமக்கான நீதி கிடைக்கவில்லை என தெரிவித்து அனைத்துலக நீதியை வேண்டி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் தொடர் போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர் அவ்வாறு கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று(12.08.2022) 2000 நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த போராட்டமானது தற்போது கந்தசாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகி, தமக்கான நீதி வேண்டி கிளிநொச்சி பேரூந்து டிப்போ சந்தி வரை பேரணியாக செல்கின்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் இராணுவத்திடம் ஒப்படைத்த பிள்ளைகளுக்கு மரண சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவர்கள் யார்?, சிங்கள அரசபடைகளை  நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டனர், கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவா, எங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது? போன்ற சொற்றொடர்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் எங்கே? எங்கே? உறவுகள் எங்கே?, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் அனைத்துலக விசாரணை வேண்டும் என்ற குரல்களை எழுப்பியவாறும் குறித்த கவனியீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் மத தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சமூக ஆர்வலர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE