2003 ஆம் ஆண்டு சிங்கள மக்களின்பொருளாதார நெருக்கடிக்கு கைகொடுத்த அதிஉயர்  மாண்புகள் நிறைந்த தமிழீழ மண்   

நீதி வெல்லும் சத்தியம் தோற்றதாக வரலாறு இல்லை..

 சிங்கள மக்களின் தமிழின அழிப்புக்கும் தமிழருக்கு தேவையான அடிப்படைத் தேவைகளுகான சிங்கள அரசின் தடைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டு  தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் அவர் சார்ந்த தமிழீழ விடுதலைப்புலிப்படைகளும்  தமிழீழமக்களும் சிங்கள மக்களையும் சிறீலங்கா என்ற அண்டை நாட்டை எவ்வளவு நேசித்தார்கள் என்பதை உணர்த்தும் பதிவைத்தான் இச் செய்தியூடாக விளக்குகிறேன்.

உரிமைக்காக போராடிய ஈழத்தமிழர்களை கடந்த 75 ஆண்டுகளாக அழிப்பதையே சிங்கள அரசு உயிர்த்துடிப்பாக ஆட்சி செய்தார்கள்.சிங்கள மக்கள் தமிழர்களின் அழிவைக கொண்டாடியதன்  இன்றைய வெளிப்பாடே சிங்கள மக்களின் சோத்துக்கான போராட்டம். இன்று சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் பஞ்சத்திற்கும் காலம்தொட்டு வந்த இனவெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்களும் அதற்கு உறுதுணையாக நின்ற  போலியான, உண்மைக்குப் புறம்பான, திரைப்படங்களை தயாரித்து சிங்கள இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டிவிட்டவர்களே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

 

 மே மாதம் 2003ம்  ஆண்டு சிங்கள மக்கள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டார்கள்.இந்த நேரத்தில் சிங்கள மக்களுக்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அக்காலப்பகுதியில் சிங்களமக்கள் வாழும் நகரங்களான களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி போன்ற பகுதிக்கு 12 பாரவூர்திகளில் உணவுப்பொருட்கள், பால்மா போன்ற பல அத்தியாவசிய பொருட்களுடன் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு உறுப்பினர்கள் அப்பொருட்களை அந்த மக்களுக்கு பகிர்ந்தளித்த நிகழ்வு ஒன்று அன்றைய நாளில் பல சிங்கள ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்கள மக்களுக்கு செய்த மனிதனேயத்தொண்டை அகமகிழ்ந்து நன்றியோடு பிரசுரித்த பதிவில் ஒன்றை இச்செய்தியூடாக பிரசுரிக்கின்றேன், அன்று சிங்கள மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை அன்போடு வரவேற்று உபசரித்து சிங்கள ஒளிப்பட தயாரிப்பாளர்கள் கூறுவது போன்று புலிகள் மக்களிலும் விட வேறுபட்டவர்கள் அல்ல, புலிகளின் உறுப்பினர்கள் எம்மைப்போன்ற மனிதர்கள் என்று உணர்ந்து புலிகளின் உறுப்பினர்களின் கையை, முகத்தை தொட்டுப்பார்த்து அவர்களை அரவணைத்தகாலமது. இன்று முன்னாள் சிங்களப்படை வீரர் ஒருவர் 30 ஆண்டுகளாக ஆண்டு வந்த சிங்கள இனவெறி பிடிதித அரசியலாளர்கள்  தம்மை ஏமாற்றி புலிகளுக்கு எதிராகயுத்தம் செய்ய வைத்ததை கூறும்போது தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளார்கள் ஏனெனில் இன்றைய நிலைபோன்று பல பொருளாதார நெருக்கடிகளை 30 ஆண்டுகளாக வலியுடன் சுமந்து கடலால் சூழப்பட்ட ஈழத் தீவில் அன்னிய தலையீட்டை ஏற்க மறுத்து தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சுயாட்சியை வேண்டி உரிமைக்காகப் போராடிய இனம் தமிழினம்.

 

1960 களில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்த யுத்தத்திலகூட அண்டைநாடான இந்தியாவிற்கு விரோதமாக சிங்கள ஆட்சியாளர்கள் சீனாவிற்கே தமது ஆதரவை தெரிவித்து இருந்தனர் அதன் பிற்காலத்தில் உருவான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இந்திய ஆதரவுடன் ஒரு தனித்துவமான கொள்கையை கொண்டிருந்தது, இருந்தாலும் கால நேரத்திற்கு ஏற்றவாறு தம்நலம் கருதி ஆட்சிக்கு வரும் போலிச் சிங்கள ஆட்சியாளர்கள் சுற்றிவர கடலால் சூழப்பட்ட தமது சொந்தநாட்டில் உலகநாடுகளால் தயாரிக்கப்படும் கொடிய ஆயுதங்களை அவர்களின் மூளைச்சலவைக்கு அடிபணிந்து சொந்த நாட்டின் மீதும், தமிழ் மக்கள் மீதும் போர் தொடுத்து நாட்டையும் ஒட்டுமொத்த மக்களையும் இன்று கொடூரமாக ஆதாள பாதாளத்தில் தள்ளி உள்ளதே இன்றைய அவலத்திற்கான காரணமாகும்.

 

இவற்றுக்குக்கெல்லாம் புலிகள் சிங்கள மக்களை கொல்ல வருகிறார்கள் போன்று உண்மைக்குப் புறம்பான போலியான திரைப்படங்களை தயாரித்து எமது சிங்கள அப்பாவி இளைஞர்கள் யுவதிகளை இராணுவத்தில் இணைத்து போலிப் பிரச்சனைகளை மேற்கொண்டது.நேசக்கரம் நீட்டிய புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் எல்லாவகையான கொடூரத்தையும் ஒரு தமிழின அழிப்பை நிகழ்த்தியது அதன் பிரதிபலனை இன்று பொருளாதாரரீதியில் பாமர சிங்கள மக்களை சுமக்கவைத்து உள்ளனர் பிழைப்பு தேடிவந்த சிங்கள திரைப்பட இயக்குனர்களும் மனிதனேயம் மனித தர்மம் அற்ற சிங்கள ஆட்சியாளர்களும் இன வாதத்தினையே வெளிப்படையாக உமிழ்ந்தும்வந்தனர்.

 

நானும் அப்படியான போலித் திரைப்படத்தை பார்த்து வியந்துபோனவன் என்ற வகையிலும், ஒரு மனிதனேயம் உள்ள  தமிழனாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் சிங்கள மக்கள் மீதும் அவர்களின் இறையாண்மை மீதும் எவ்வளவு அக்கறைக இருந்துள்ளார் என்பதை பல சந்தர்ப்பங்களில் பலரிடம் இருந்து அறிந்து கொண்டவன் என்ற வகையிலும், அத்தோடு நெருக்கடிகள் வரும்போதெல்லாம் சிங்கள மக்களும், இசுலாமிய மக்களும் மேதகு பிரபாகரன் பெயரைஉச்சரித்து அவரை தேடுவதையும் 2009ம் ஆண்டின் பின்னர் கண்டறிந்தவன் என்ற வகையிலும் இச்செய்தியை எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

செய்தித் தயாரிப்பாளர் 

தயீசன்

  

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE