சுகிர்தன் அவர்களின் பொய்யான பரப்புரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சுகிர்தன்அவர்கள் கனடாவில் சுமந்திரன் சாணக்கியன் கலந்து கொண்ட கூட்டம் ஏற்பாட்டாளர்களால் குழப்பப்பட்டதை மறைத்து வலி சுமந்த மக்கள்மீது பழி போடுவது தமிழினத்துரோகம்.சுதர்சன் ஒரு தமிழினத்துரோகி..
கூட்டத்திற்கான அழைப்பிதழில் தொலைபேசி எண் தெரியப்படுத்தப்படவில்லை.கூட்டம் அறிவித்த நாளிலிருந்து ஒழுங்கமைப்பாளர்களோடு யாரும் பேசமுடியாது..
கூட்டம் 5:30மணிக்கு தொடங்குவதாக இருந்தது.மக்கள் 5மணிக்குப்போகும் போது மண்டபவழி பூட்டப்பட்டிருந்தது.வாகனத்தரிப்பிடம் முற்றாக மூடப்பட்டிருந்தது.
வலி சுமந்த மக்கள் வெளியே ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இந்த ஆர்பாட்டத்தில் சிங்கள அரசால் பாதிக்கப்பட்ட மக்களும் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமே பேராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.வலி சுமந்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அவர்களைக் கடந்து சென்றது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலி சுமந்த மக்களை கொதிப்படையச்செய்தது.சாணக்கியனும் சுமந்திரனும் கூட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலிசுமந்த மக்களைப் பற்றி இழிவாகப்பேசுகிறார்கள்.
ஒழுங்கமைப்பாளர்கள் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள். கூட்டத்தையும் ஆர்பாட்டத்தையும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பவோ ஒளிபரப்பவோ அல்லது காணொளிக் காட்சியாக்கவோ
முடியாது என ஒழுங்கமைப்பாளர்கள் அச்சுறுத்தினார்கள்.
ஏற்பாட்டாளர்கள் கேள்வி எழுதித்தரும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கமுடியும் எனச் சொன்னார்கள். மக்கள் நேரடியாக கேள்விகேட்க வேண்டும் எனக்கேட்டபோது மறுத்தார்கள். கூட்டத்தினர் குழம்பினர்.காரணம் சுமந்திரன் விரும்பாத கேள்விக்குப் பதிலளிக்காமல் விடலாம்.அதனால் மக்கள் அதை விரும்பவில்லை.ஊடகங்கள் அதை விரும்பவில்லை.
சுமந்திரனும் சாணக்கியனும் கட்சிகளுக்கிடையே உள்ள காழ்ப்புணர்வைக் கக்குவதிலும் சிங்கள அரசுக்கான சார்பான பேச்சுக்களில் மக்கள் கொதிப்படைந்தார்கள்.குறிப்பாக இளையோரே சுமந்திரனை திட்டினார்கள்.வலி சுமந்த மக்களின் கொதிப்பால் ஏற்பாட்டாளர்களே சுமந்திரனையும் சாணக்கியனையும் காவல்துறையின் பாதுகாப்போடு வெளியேற்றப்பட்டார்கள்.
ஒழுங்கமைப்பாளர்கள் கனடாக் காவல்துறையை வைத்து சிங்கள காவல்துறையைப் போல அடித்துவிரட்டவே அழைக்கப்பட்டார்கள்.
இளையோர் வன்முறையற்ற பேச்சுக்களை பார்த்த காவல்துறை ஒழுங்கமைப்பாளர்களின் வேண்டுகோளை நிராகரித்தார்கள்.
காவல்துறை ஒழுங்கமைப்பாளருக்கு சொன்ன செய்தி.கனடா வாழ் தமிழர்கள் தமது எண்ணங்களை அறவழியில் முன்னெடுக்கிறார்கள். அவர்களை நாம் வெளியேற்றமுடியாது என காவல்துறை மறுத்துவிட்டது.
ஏற்பாட்டாளர்களே சுமந்திரனையும் சாணக்கியனையும் காவல்துறையின் பாதுகாப்போடு வெளியேற்றிவிட்டார்கள்.
ஏற்பாட்டாளர்களே கூட்டத்தைக் கூட்டி கூட்டத்திற்கு வந்தவர்களை கோபப்படவைத்து வன்முறையில் இளையோர்களை வலிந்து இழுத்தபோதும் ஏற்பாட்டாளர்களின் நிம்மதியை உடைத்து மூக்குடைபட்டவர்கள் ஏற்பாட்டாளர்கள்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கம் பெற்ற கட்சி.இக்கட்சிக்கு வரையறுக்கப்பட்ட பணிகளே உண்டு.அந்த வரையறைகளை மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் மிகத்தெளிவாகச்சொல்லியுள்ளார்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட்டு விடுதலைப்புலிகளின் வாக்கில் பெற்றுவிட்டு மக்கள் தம்மைத் தெரிவு செய்தார்கள் என்ற பொய்யை வாக்களித்த மக்களுக்குச் சொல்லி மக்களை கடந்த பல ஆண்டாக ஏமாற்றி வருகிறார்கள்.
விடுதலைப்புலிகளால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வரையறுக்கப்பட்ட அரசியல் செயற்பாடுஉண்டு.உலகநாடுகளுடன் பேசுவதற்கு எந்தத் தகுதியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் கிடையாது.காரணம் சிங்கள அரசியல் யாப்பில் கீழ் இருந்து கொண்டு தமிழர்களின் தன்னாட்சி உரிமைகளைப் பேச முடியாது.சிங்கள தமிழ்மக்களின் சிக்கலை வெளிநாடுகளோடு தமிழ்மக்கள் நடுவில் இருக்கின்ற மக்கள் அமைப்புகள் பேசவேண்டும்.
இதுவரை தமிழர்பேரவையும் கூட்டமைப்பும் திரட்டிய நிதிக்கு நடந்தது என்ன?
கனடாவில் 2015 ஆண்டு தமிழ ர் பேரவையும் கூட்டமைப்பும் சேர்ந்து திரட்டிய நிதி 10 இலக்கம்(1000000)கனடா வெள்ளிகள்.இதுவரை பங்களிப்பு வழங்கிய மக்களுக்கு கணக்கு வெளியிடப்படவில்லை.கனடா வருமானவரித்துறைக்கு இதன் கணக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
2015 ஆம் ஆண்டு சம்பூர் மக்களின் வாழ்வாதாரத்திற்காக தமிழர் பேரவையும் கூட்டமைப்பும் திரட்டிய பணம் பல இலக்கம் கனடா வெள்ளிகள்.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டவர்கள்.இதுவரை சம்பூர் மக்களுக்கு அந்நிதி சென்றடையவில்லை.கனடாவாழ் மக்களுக்கு கணக்குக் காட்டவில்லை.கனடா வருமானவரித்துறைக்கும் கணக்குகள் ஒப்படைக்கப்படவில்லை.
2016 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பால்பண்ணை அமைப்பதற்கு தமிழர் பேரவை திரட்டிய பணம் பல இலக்கம் கனடா வெள்ளிகள் .கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டவர்கள்.இதுவரை அந்நிலையில் இதுவரை பாற்பண்ணை அமைக்கப்படவில்லை.கனடாவாழ் மக்களுக்கு கணக்குக் காட்டவில்லை.கனடா வருமானவரித்துறைக்கும் கணக்குகள் ஒப்படைக்கப்படவில்லை.
2017ஆம் ஆண்டு தென்னமரவாடி மக்களின் வாழ்வாதாரத்திற்காக தமிழர் பேரவை திரட்டிய பணம் பல இலக்கம்.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டவர்கள்.இதுவரைச தென்னைமரவாடி மக்களுக்கு அந்நிதி சென்றடையவில்லை.கனடாவாழ் மக்களுக்கு கணக்குக் காட்டவில்லை.கனடா வருமானவரித்துறைக்கும் கணக்குகள் ஒப்படைக்கப்படவில்லை.
இத்தோடு விடுதலைப்புலிகளின் வாக்குகளைப் பெற்று விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழர்பேரவையும் தொடர்ந்து நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் இனப்படுகொலையை ஏற்காதவர்கள்.இனப்படுகொலைக்கான தீர்வுக்காக பணியாற்ற மறுப்பவர்கள்.இதனால் மக்கள் சுமந்திரன் சாணக்கியன் இருவரையும் இழிவாகப் பேசினார்கள்.
வலி சுமந்த தமிழிச்சி சுமந்திரனை ஏன் திட்டுகிறார்?சுமந்திரன் தொடர்ந்தும் தமிழ்மக்களை ஏமாற்றி வருகிறார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமிர்தலிங்க த்திற்கு வழங்கிய பரிசை சம்பந்தனுக்கு வழங்கியிருந்தால் இனவழிப்பு நடந்திருக்காது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஒப்புதல் அழித்த தமிழினத்துரோகி சம்பந்தன்.
இன நலன் சார்ந்து தேசியத்தலைவரால் மன்னிப்பு வழங்கிய சம்பந்தன் தமிழினத்தின் உழைப்பால் கட்டிய ஒட்டுமொத்த தமிழீழக்குடியரசையும் தமிழினத்தையும் அழித்த தேசத்துரோகி.இந்த தேசத்துரோகிக்கு துணைநிற்கும் அத்தனை பேரும் தமிழினத்துரோகிகள்.
அடுத்த தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடாமல் தமிழரசுக்கட்சியிலோ அல்லது சுயேச்சையாகப் போட்டியிட்டு முடிந்தால் வென்று பாருங்கள்.
சுமந்திரனும் சாணக்கியனும் கனடா வாழ் தமிழர்களுடைய இனப்படுகொலைக்கான அரசியல் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு சிங்கள அரசைக் காப்பாற்றவே கனடா வந்தார்கள்.
குறிப்பாக 104 சட்டசபையைக் சிங்கள அரசு பலவழிகளில் தடுக்க முயற்சி செய்து தோல்விகண்டார்கள்.
தமிழர்களை வைத்தே கனடா வாழ் தமிழர்களின் அரசியல் செயற்பாட்டிற்கு ஆப்படிக்க இரண்டு துரோகிகளை 142கோடி ரூபாய்க்கு சோகம் பேனர்கள் தான் சுமந்திரனும் சாணக்கியனும்.
கனடாமண்ணில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஆப்படிக்க வருபவர்களை விரட்டியடிப்பதே கனடாவாழ் தமிழர்களின் பணி.