2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் நாள் தமிழ்த்தேசியக் கொடையாளர் சோபன் நிவேதா இணையரின் மகள் ரிச்சியாவின்(Parents Shoban and Nivetha Daughter Rishiya) 5 ஆவதுபிறந்தநாளையும் (Son Riyaan)மகன் ரியனின் 9 ஆவது பிறந்தநாளளையும்முன்னிட்டு 21-02-2022 கனடாக்கிளைஊடாக நிதி உதவி
மக்களால் ஒண்றினைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டம் சுசிலன் பவுண்டேசன்பதிவு இலக்கம் : [GL0021438] 49000 ரூபா பெறுமதியான வேளாண்மைக்குரிய துணைக்கருவிகள் வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி வழங்கப்பெற்றது.அதன்வழியில் உதவி பெற்றவர்கள் யூன் மாதம் முதல் 25,000 ரூபா வருமானத்தைஒவ்வொரு மாதமும் பெறுவதற்க்கு வியர்வை சிந்தியுள்ளார்கள். அவர்களின் கடின உழைப்பு மிகப்பெரிய உற்சாகத்தை எமக்கு வழங்கியுள்ளது.
1.வாழ்தாரக்கொடை செய்தவர் மீண்டும் பலருக்கு உதவி செய்யும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது.
2.சுசீலன் அறக்கட்டளையினர் இன்னும் சிறப்பாக பல உதவிகளை கொடையாளர்களிடம் இருந்து பெற்று வாழ்தாரத்திற்காக அல்லல்படும் உறுப்பினர்களை இனம் கண்டு உதவி செய்ய வாய்பளித்திருக்கிறது
3.கொடையாளர்களின் வாழ்தாரம் சிறப்பதைப் பார்த்து இதுவரை கொடையாளர்களாக மாறாத உறவுகளை கொடையாளராக மாறுவதற்கான மனநிலையை உருவாக்கியிருக்கிறது.
4.தமிழர்களின் ஒற்றுமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
5.இந்த திட்டத்தில் பங்காற்றிய அனைவரும் நித்திரைக்குச் செல்லும் போது நிம்மதிப்பெருமூச்சோடு மகிழ்வாக தூங்குவோம்.
தொடர்ந்து கொடையாளர்கள் அள்ளிக்கொடுத்து வாழ்தாரத்தினை எமது உறவுகள் பெற்று சிறப்பாக வாழ தேசியத்தலைவர்,எங்கள் மாவீரர் தெய்வங்கள் இனஅழிப்பில் கொலைசெய்யப்பட்ட அப்பாவித்தமிழர்கள் அனைவரது உயிர் அமைதியாக உறங்கும்.தொடர்ந்து நாம் அனைவரும் இணைந்து கைகளை இறுகக்கோர்ப்போம்.
சோபன் நிவேதா குடும்பத்தினர் தொடர் கொடையாளர்களாக சுசீலன் அறக்கட்டளையினருடன் இணைந்துள்ளார்கள்.