சிங்கள குடியரசின் கொண்டாட்டமும் தமிழீழக் குடியரசின் கரிநாளும்

சிங்கள அடக்குமுறைக்கு எதிரான உணவு தவிர்ப்பு 2052 சுறவம் 21ஆம் நாள் செவ்வாய்க்கிழமை(Febuary வடகிழக்கில் காணாமல் 2,2021)ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தன் கோயில் முன்றலில் இன்று ஆரம்பமாகியுள்ளது. சிங்கள இனத்தால் தமிழர்களை அழிப்பதற்கு முழுமையான அரசியல் அதிகாரத்தைப் பெற்ற நாளான பெப்ரவரி 4ஆம் நாளை சிங்களக்குடியரசு கொண்டாட வருகிறது. அதுநாள் தமிழீழக் குடியரசு மக்கள் கரிநாளாக கடைப்பிடித்து வருகிறார்கள். வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்  அமைப்பினர் இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளனர். 2021பெப்ரவரி 2ஆம்நாளில் இருந்து 2021பெப்ரவரி 6 ஆம் நாள் வரை இந்த போராட்டம் அமைதியான சுழற்சிமுறையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில்  மதகுருக்கள், பொதுமக்கள், சிவில்சமூக அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியலாளர்கள்,  என அனைவரும் கலந்து கொண்டு தமது போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அத்துடன் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து நாளை  3 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள, பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான நடைபயணத்துக்கும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE