தமிழரல்லாதவர்களை தமிழ்மரபுத் திங்களில் பெருமைப்படுத்துவது தமிழ் மரபுக்கு எதிரானது

Ilango Arasiyal

கனடா மண்ணில் கனடா அரசால் அக்டோபர் 2016 ஆம் ஆண்டு அரசாணையாக தை மாதம் தமிழர் மரபுத்திங்களாக பிறப்பிக்கப்பட்டது.இதற்கு உரிமை கொண்டாடுவதிலும் பல போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன.இப்போட்டியில் நசுங்கி சின்னாபின்னமாக்கப்படுபவர்கள் தமிழ்மொழி தமிழர்மரபு தமிழர்கள். தமிழர்கள்  நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமைகள் நிறைந்தவர்கள்.

பண்டைய தமிழர்களால் வழங்கப்பட்ட தமிழரின் வாழ்வியலை வளப்படுத்தும் பெரும் படைப்புக்களை மொழி சிதறாமல் மரபுவழி தவறாமல் நமது முன்னோர்கள்  எமக்கு வழங்கியிருக்கிறார்கள். அதைப்பற்றி எள்ளளவும் அறிவில்லாதவர்களிடம் தமிழர்களின் மரபு சிக்குண்டு இன்று தமிழ்மரபுகள் அழிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம்.

அந்தவகையில் தமிழ்மரபுத்திங்களை உரிமை கொண்டாடத் துடிப்பவர்கள் விடும் தமிழ்மரபு சார்ந்த தவறுகளை தொலைபேசியூடாக 2022 சனவரி 10 ஆம் நாள் திங்கட்கிழமை வெளிப்படுத்தியிருந்தோம். முத்துலட்சுமி ரெட்டி என்பவர் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்.அவர் பிறந்த இடம் தமிழ்நாடு.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் தமிழ்மரபை தமிழை அழித்த பெருமைக்குரியவர்கள் ஈ.வே.ரா அறிஞர் அண்ணா கருணாநிதி எம்யிஆர் யெயலலிதா.இவர்கள் தமிழர்கள் அல்லாதவர்கள்.இவர்கள் அனைவரும் அண்டைய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் தமிழ்நாட்டை ஆண்ட தமிழர் அல்லாதவர்கள்.இவர்களின் உண்மை முகம் 2009க்குப் பின் தமிழ்த்தேசிய அரசியலால் கிழித்தெறியப்படுகிறது.

தமிழ்மரபுத் திங்கள் நிகழ்வுகளில் தமிழர்களின் ஆளுமைகளை வெளிக்கொண்டுவரவேண்டிய பொறுப்பு தமிழ்மரபுத்திங்களை உரிமை கொண்டாடத்  துடிப்பவர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும்.

முத்துலட்சுமி ரெட்டி தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்.அவரை தமிழ்மரபுத் திங்கள் நாளில் தமிழர்கள் முன்னிலைப்படுத்துவது தமிழ்மரபுக்கு எதிரானது. அவருடைய படத்தையும் கட்டுரையையும் மீளப்பெறவேண்டும்.அவரோடு இணைக்கப்பட்ட வேற்றினத்தவர்களையும் முழுமையாக மீளப்பெறப்படவேண்டும்.

தமிழ் மரபுத்திங்களை முன்னெடுக்க விரும்புபவர்கள் தமிழரின் வரலாற்றைப் படிக்கவேண்டும்.வரலாற்றின் அடிப்படையில் மரபுத்திங்களை முன்னெடுக்கவேண்டும்.தமிழர் மரபை சிதைப்பதற்கு கனடா அரசு அரசாணை பிறப்பிக்கவில்லை.

தமிழீழ விடுதலையில் கிட்டத்தட்ட 50000 மாவீரர்கள் எமது அரசியல் அதிகாரத்திற்காக உயிரை ஈகம் செய்துள்ளார்கள்.அவர்களை தமிழ்மரபுத்திங்களில் பெருமைப்படுத்தமுடியும்.தமிழின அழிப்பால் பாதிக்கப்பட்ட போராளிகளையும் அவர்தம் குடும்பங்களை பெருமைப்படுத்தமுடியும்.

தமிழீழ மண்மீட்புக்காக தமிழீழத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர்நாடுகளிலும் உயிர்களை ஈகம் செய்த தமிழர்களின் பெருமைகளை தமிழ்மரபுத்திங்கள் நாளில் பெருமைப்படுத்தவேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் நீதிக்காக போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும்  பெருமைப்படுத்தி முன்னிலைப்படுத்த வேண்டும்.

ஈழத்தில் 100க்கு மேற்ப்பட்ட தமிழ்அறிஞர்கள் வாழ்ந்த வரலாறுகளில் இருந்து பெருமைப்படுத்தவேண்டும். தமிழ்நாட்டில் ஆயிரமாயிரம் தமிழ் அறிஞர்கள் வாழ்ந்த வரலாறுகளில் இருந்து பெருமைப்படுத்தவேண்டும்.

புலம்பெயர்ந்த மண்ணில் பல 100க்கு மேற்ப்பட்ட தமிழ் அறிஞர்கள் வாழ்ந்த வரலாறுகளில் இருந்து பெருமைப்படுத்தமுடியும்.தமிழ்த்தேசியச் சின்னங்களை முன்னிலைப்படுத்தி தமிழ்மரபுத்திங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

எமது வரலாற்று வழியில் அளவுக்கு அதிகமான தமிழர்களின் மரபுகளை கைக்குள்  வைத்துக்கொண்டு தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட முத்துலட்சுமி ரெட்டியை பெருமைப்படுத்துவதை தமிழர்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு சிங்கள அரசு எமது மரபை அழிப்பது போன்று சிங்கள அரசுக்கும் இந்திய அரசுக்கும் புலம்பெயர் மண்ணில் இவர்கள் துணைபோகிறார்களோ என மக்கள் அவதானித்து வருகிறார்கள்.

அட்டைப்படம் மீளப்பெறப்பட்டு தமிழர்களின் மரபு உள்வாங்கப்பட்ட அட்டைப்படம் வெளியிடப்படவேண்டும் என்பது தமிழ் மக்களின் வேண்டுகோள்.

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது.  ஆசிரியரோ   எழுத்தாளரோ 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.ஆசிரியரோ எழுத்தாளரோ 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE