பருத்தித்துறை மக்களின் 20 ஆவது ஆண்டு கோடைகாலக்கூடல்

2053 ஆம் ஆண்டு விடைத்திங்கள் 30 ஆம் நாள் காரிக்கிழமை(June 11,2022 ,Saturday) காலை 10 மணிக்கு மிலிக்கன் பூங்கா பகுதி “சி”(Milliken Park-Area “C”  Mccowan & Steeles)பருத்தித்துறை வாழ் மக்கள் கூடிக் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.அனைத்து அகவையயினருக்கும் விளையாட்டுகள் நடைபெறும்.

உணவுகள் பகிர்ந்துண்பது மிகச் சிறப்பாக ஒழுங்மைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை தோசை

பருத்தித்துறைக்கூழ்

பருத்தித்துறை B.B.Q

பருத்தித்துறை கொத்துரொட்டி

பருத்தித்துறை சிற்றுண்டிகள்

பருத்தித்துறை பழங்கள்

பருத்தித்துறை குளிர்பழச்சாறு

என அனைத்தும் அனைவரும் பகிர்ந்துண்ணும் அரும் பண்பு கிடைத்திருக்கிறது.விழாவின் நிறைவாக பரிசளிப்பு நிகழ்வு நடைபெறும்.பருத்தித்துறை மக்கள் ஒன்றியத்தினர்  பருத்தித்துறை வாழ் மக்களை அன்போடு அழைக்கிறார்கள். 

ஒன்றுகூடல் பற்றி அறிய பேச:

மணியம் ஆசிரியர் தலைவர் 647 545 9905

பாலேசு செயலாளர் 416 358 6853

 

 

 

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE