பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான  நீண்ட நடையுலா 

 

தடைகளை உடைத்து அடை மழைக்குள் ஈழமண்ணில் தமிழர்களின் எழுச்சிமிக்க “பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை” நடையுலா 2052 சுறவம் 22ஆம் நாள் அறிவன்கிழமை(February 3,2021) தொடங்கி நடந்துகொண்டு இருக்கிறது.மீண்டும் சிங்கள அடக்குமுறையை அறவழியில் உடைத்து எழுச்சி வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.ஊர்தியிலும் நடையாகவும் 3. நாட்களாக தொடரும் இந்த உலாகொட்டும் மழையிலும் சிங்களப்படை காவல்துறையினர்,அரச அச்சுறுத்தல்கள், தடைகளை மீறி எழுச்சியோடும் தொடர்கிறது.இன்று காலை அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில்  நடையுலா தொடங்கியபோதே சிங்கள அரசகாவல்துறையினர் நீதிமன்றத் தடை இருப்பதாகப் பொய்யைச் சொல்லி அச்சுறுத்தும் பாணியில் சிங்கள அரசபடைகள்குவிக்கப்பட்டும் சட்டரீதியாக நடையுலாத் தொடர்கிறது.பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கவும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டத்துக்கே நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.இன்று பொத்துவிலில் ஆரம்பமாகிய பேரணி, முக்கிய நகரங்களில் நடையுலாவாகவும் ஏனைய இடங்களில் ஊர்திப் பேரணியாகவும் தொடர்ந்து எதிர்வரும் 2021,6 ஆம் நாள் பொலிகண்டியை வந்தடையும் என்று தீர்மானிக்கப்பட்டது.வடக்கு- கிழக்கு மாகாண சமயத்தலைவர்கள் ,மக்கள் சமூக அமைப்புக்கள் மற்றும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இணைந்து மக்களை அணி திரட்டி இந்த எழுச்சிமிக்க மக்கள் திரள் வரலாற்றுச் சிறப்புமிக்கப் நீணட நடையுலாவை நடத்துகின்றனர்.தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட ஈழமண் முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும்,ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் மக்கள் சமூக அமைப்புகள், பலசமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கையை நடைமுறை படுத்தக்கோரியும்,மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும், மஇசுலாம் மக்களின் மதநம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப்போராட்டம் நீண்ட நடையுலாமுன்னெடுக்கப்படுகிறது.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான நீண்ட நடையுலா வெற்றி பெற வாழ்த்துவோம்.

 

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE